Bama Samayal

வடகறி / Vadacurry

Bama Narasimhan
Recipe by
Comments Off on வடகறி / Vadacurry

வடகறி

 

தேவையான பொருட்கள் – வடை செய்ய :

 

க.பருப்பு                         : 1 கப் (ஊறவைக்கவும்)

பூண்டு                             : 10 பல்

இஞ்சி                              : 1 சிறிய துண்டு

சோம்பு                           : 1 டேபிள் ஸ்பூன்’

எண்ணை                      : 1/4 கிலோ

 

செய்முறை – வடை :

 

  • ஊறிய க.பருப்புடன் சோம்பு, இஞ்சி, பூண்டு சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுக்கவும்
  • வாணலியில் எண்ணை வைத்து காய்ந்தவுடன் வடை மாவை கிள்ளி போட்டு வெந்தவுடன் எடுத்து வைக்கவும்.

 

தேவையான பொருட்கள் – கிரேவி செய்ய :

 

வெங்காயம்                : 2 (பொடியாக நறுக்கவும்)

தக்காளி                         : 2 (பொடியாக நறுக்கவும்)

தேங்காய் பால்          : 1 டம்ளர்

 

மசாலா அரைப்பதற்கு :

 

வெங்காயம்                : 1 (நறுக்கி வதக்கவும்)

சோம்பு                           : 2 டி ஸ்பூன்

மிளகாய் பொடி         : 2 டேபிள் ஸ்பூன்

பூண்டு                            : 5 பல்

இஞ்சி                             : 1 துண்டு

மஞ்சள் பொடி            : 1/2 டி ஸ்பூன்

கடுகு                               : 1 டி ஸ்பூன் (தாளிக்க)

 

(வதக்கிய வெங்காயத்துடன், கொடுத்திருக்கும் சாமான்களை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்)

 

செய்முறை – வடகறி :

 

  • ஒரு கடாயில் எண்ணை விட்டு கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • பிறகு அரைத்த மசாலா சேர்த்து வதக்கவும்.
  • மஞ்சள் பொடி சேர்த்து வதக்கி 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதி விடவும்.
  • வடையை பிய்த்து அதில் சேர்க்கவும்
  • சேர்ந்து வந்தவுடன் தேங்காய் பால் சேர்க்கவும்.
  • அடுப்பை அனைத்து பச்சை கொத்த மல்லி பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
  • இட்லி, தோசை, பொங்கல் எல்லாவற்றிற்கும் தொட்டுக்கொள்ள நன்றாக ­இருக்கும்.
Category: