Bama Samayal

வடாம் (கருவடாம்) / Vadaam

Bama Narasimhan
Recipe by
Comments Off on வடாம் (கருவடாம்) / Vadaam

வடாம் (கருவடாம்)

 

தேவையான பொருட்கள் :

 

எலுமிச்சம் பழம்     : 3 Nos. (கொஞ்சம் பெரிய பழம் – பிழிந்து கொள்ளவும்)

ப.மிளகாய்                  : 100 கிராம்

பால்                               : 1 கரண்டி

பெருங்காயம்            : சிறு துண்டு

உப்பு                               : 1 1/2 கைப்பிடி

தண்ணீர்                       : 2 1/2 பங்கு (மாவு – 1 : 2 1/2 – தண்ணீர்)

 

மிஷினில் நைசாக அரைக்கவும் :

 

ப.அரிசி                         : 1 கிலோ (மாவு அரிசி)

ஜவ்வரிசி                     : 200 கிராம் to 250 gram

 

செய்முறை :

 

  • பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டவும்.
  • தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவும்.
  • அதனுடன் பால், பெருங்காயம் வடிகட்டிய பச்சை மிளகாய் சேர்க்கவும்
  • பிறகு எலுமிச்சம் பழம் ஜூஸ் சேர்க்கவும்.
  • பொங்கி வரும்போது மாவை கொட்டி கிளறவும்.
  • அடுப்பை சின்னதாக வைத்து கிளறவும்.
  • மாவு வெந்தவுடன் இறக்கி மூடி வைக்கவும்.
  • சிறிது சூடு இருக்கும்பொழுதே மாவை சிறிது சிறிதாக பிசைந்து அச்சில் போட்டு வெய்யிலில் பிழியவும்.

 

Note : 7 1/2 லிட்டர் குக்கரில் உள் பக்கம் உள்ள ஆணி வரை தண்ணீர் வைத்து மாவை கிளறினால் easy யாக உள்ளது.