Bama Samayal

வாழைக்காய் பொடிமாஸ்/Vaazhakkai Podimaas

Bama Narasimhan
Recipe by
Comments Off on வாழைக்காய் பொடிமாஸ்/Vaazhakkai Podimaas

வாழைக்காய் பொடிமாஸ்

 

வாழைக்காய்                             : 2 Nos.

பச்சை மிளகாய்                        : 4 Nos. (அவரவர் தேவைக்கு)

இஞ்சி                                             : சிறிது (துருவிக்கொள்ளவும்)

உப்பு                                                : தேவையான அளவு

கடுகு                                               : 1 டி ஸ்பூன்.

உளுத்தம் பருப்பு                       : 1 டி ஸ்பூன்.

பெருங்காயப்பொடி                  : 1 டி ஸ்பூன்.

எண்ணை                                       : 4 டி ஸ்பூன் (தாளிக்க)

தேங்காய்                                      : 1 சிறிய கப் (4 டேபிள் ஸ்பூன்)

கருவேப்பிலை                          : 1 கொத்து (ஆர்க்கு)

 

செய்முறை :

 

– வாழைக்காயை குக்கரில் (2 விசில்) வேக வைத்து தோலை உரித்து (காரட் துருவலில்) துருவிக்கொள்ளவும்.

– பச்சை மிளகாய், இஞ்சி பொடியாக நறுக்கவும்.

– வாணலியில் எண்ணை விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை தாளித்து துருவிய வாழைக்காய் போட்டு வதக்கவும்.

– பிறகு உப்பு, துருவிய தேங்காய் சேர்த்து கிளறி இறக்கி பெருங்காயப்பொடி சேர்க்கவும்.

– சுவையான வாழை பொடிமாஸ் ரெடி.

Category: