Bama Samayal

வெஜிடேபிள் சாகு / Vegetable Sagu

Bama Narasimhan
Recipe by
Comments Off on வெஜிடேபிள் சாகு / Vegetable Sagu

வெஜிடேபிள் சாகு

 

தேவையான பொருட்கள் :

 

பீன்ஸ் & காரட்                          : பொடியாக நறுக்கியது (கூட்டுக்கு நறுக்குவது போல்)

வெங்காயம்                               : 2 Nos (பொடியாக நறுக்கவும்)

குடை மிளகாய்                        : 2 Nos (பொடியாக நறுக்கவும்)

மிளகாய் பொடி                        : 1 1/2 டி ஸ்பூன்

உப்பு                                               : தேவையான அளவு

கரம் மசாலா                              : 1 டி ஸ்பூன்

கடுகு                                              : 1 டி ஸ்பூன்

எண்ணை                                     : 2 டி ஸ்பூன்

கொத்தமல்லி தழை               : சிறிது

அரைக்கவும் :

பொட்டுக் கடலை                  : 1 டேபிள் ஸ்பூன்

தேங்காய்                                   : 1/2 மூடி துருவியது

 

செய்முறை :

 

  • பீன்ஸ் & காரட் இவைகளை வேகவைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் எண்ணை விட்டு கடுகு போடவும்.
  • கடுகு பொரிந்தவுடன், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • நன்றாக வெங்காயம் வதங்கியவுடன் குடை மிளகாய் சேர்க்கவும்.
  • குடை மிளகாய் வதங்கியவுடன், அரைத்த விழுது சேர்க்கவும்.
  • 1 டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
  • பிறகு மிளகாய் பொடி சேர்க்கவும்.
  • வெந்த காய்கறிகள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
  • கிரேவி thick ஆனவுடன் கரம் மசாலா சேர்க்கவும்.
  • ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
  • வாசனை பிடித்தவர்கள், தாளிக்கும்பொழுது 4 பல் பூண்டு மற்றும் சிறிய பட்டை சேர்க்கலாம்.
Category: