Bama Samayal

வெல்ல சாதம் / Vella Saadham

Bama Narasimhan
Recipe by
Comments Off on வெல்ல சாதம் / Vella Saadham

வெல்ல சாதம்

 

தேவையான பொருட்கள் :

 

வெள்ளை சாதம்                     : 1 ஆழாக்கு

வெல்லம்                                    : 1/2 ஆழாக்கு (பாகு முத்தலாக வைத்துக்கொள்ளவும்)

தேங்காய் துருவல்                 : 2 டேபிள் ஸ்பூன்

நெய்                                               : 1 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் பொடி                      : 1 சிட்டிகை

முந்திரி பருப்பு                          : 5 Nos

 

செய்முறை :

 

  • வெல்லத்தில் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
  • வெல்லம் கரைந்ததும் வடிகட்டவும்.
  • பிறகு பாகு வைக்கவும். தண்ணீரில், பாகை விட்டு பார்த்தல் கையில் உருட்டி வர வேண்டும்
  • பிறகு வடித்த சாதத்தை பாகில் உதிர்த்து போட்டு, தேங்காய் & ஏலப்பொடி சேர்த்து கிளறவும்.
  • வாணலியில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும்.
  • பிறகு நெய்யில் முந்திரி வறுத்து அதில் சேர்க்கவும்.
  • வெல்ல சாதம் ரெடி.