Bama Samayal

வேப்பம்பூ ரசம் / Veppambu Rasam

Bama Narasimhan
Recipe by
Comments Off on வேப்பம்பூ ரசம் / Veppambu Rasam

வேப்பம்பூ ரசம்

 

தேவையான பொருட்கள் :

 

புளி                                      : 1 எலுமிச்சை அளவு (ஊறவைக்கவும்)

து.பருப்பு                           : 50 கிராம் (1/2 டி ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும்)

மிளகாய் வற்றல்         : 5 Nos.

 

மிக்ஸியில் கரகரப்பாக பொடிக்கவும் :              

மிளகு                                : 1 டேபிள் ஸ்பூன்

சீரகம்                                 : 1 டேபிள் ஸ்பூன்

தனியா                             : 1 டேபிள் ஸ்பூன்

உப்பு                                   : ருசிகேற்ப

பெருங்காயம்                : 1 சிறிய துண்டு

கருவேப்பிலை             : 2 ஆர்க்கு

 

தாளிக்க :

 

நெய்                                   : 2 டேபிள் ஸ்பூன்

கடுகு                                  : 1 டி ஸ்பூன்

சீரகம்                                 : 1 டி ஸ்பூன்

வேப்பம்பூ                        : 1 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை :

 

  • புளியை 1 டம்ளர் தண்ணீரில் நன்றாக கரைக்கவும்.
  • வடிகட்டி அதனுடன் உப்பு, பெருங்காயம், சேர்த்து கொதிக்க விடவும்.
  • புளி பச்சை வாசனை போனவுடன் பொடித்த பொடியை சேர்க்கவும்.
  • பிறகு வெந்த பருப்பை 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து மத்தினால் நன்றாக சிலுப்பி ரசத்தில் சேர்க்கவும்.
  • பொங்கி வந்தவுடன் இறக்கி நெய்யில் கடுகு, சீரகம், போட்டு வெடித்தவுடன் வேப்பம்பூ சேர்த்து பொரிந்தவுடன் ரசத்தில் சேர்க்கவும்.
  • கருவேப்பிலையை கிள்ளி சேர்க்கவும்.
  • வேப்பம்பூ மனத்துடன் சுவையாக இருக்கும்.