Bama Samayal

வேப்பிலை கட்டி (நார்த்த இலை பொடி)/Naartha Elai Podi

Bama Narasimhan
Recipe by
Comments Off on வேப்பிலை கட்டி (நார்த்த இலை பொடி)/Naartha Elai Podi

வேப்பிலை கட்டி (நார்த்த இலை பொடி)

தேவையான பொருட்கள் :

மிளகாய் வற்றல் : 4 Nos.
புளி : 1 நெல்லிக்காய் அளவு
உப்பு : தேவையான அளவு
பெருங்காயம் : 1 சிறிய துண்டு
மிளகு : 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் : 1 டி ஸ்பூன்
எண்ணை : சிறிது
நார்த்த இலை : 1 bowl

செய்முறை :

– நார்த்த இலையை நன்றாக அலம்பி ஈரம் போக துடைத்து கொள்ளவும்.
– ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணை விட்டு காய்ந்ததும் மிளகாய் வற்றல், மிளகு, சீரகம், பெருங்காயம், உப்பு எல்லாவற்றையும் வறுத்து கொள்ளவும்.
– பிறகு எல்லாவற்றையும் புளியுடன் சேர்த்து மிக்சியில் பொடி செய்யவும்.
– கடைசியில் நார்த்த இலையையும் சேர்த்து பொடி செய்யவும்.
– பிறகு எல்லாவற்றையும் நன்றாக கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பாட்டிலில் போட்டு வைத்துகொள்ளவும்.
– இது தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

Category: