Bama Samayal

பருப்புப்போளி / Paruppu Boli – சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு

Bama Narasimhan
Recipe by
Comments Off on பருப்புப்போளி / Paruppu Boli – சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு

பருப்புப்போளி – சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு

தேவையான பொருட்கள் : (சுமார் 18 போளி வரும்)

 

கடலை பருப்பு                                   : 1 டம்ளர் (200 கிராம்)

வெல்லம்                                              : 1 1/2 டம்ளர்

ஏலப்பொடி                                           : 1 டி ஸ்பூன்.

தேங்காய்                                              : 1/2 மூடி (துருவிக்கொள்ளவும்)

மைதா மாவு                                        : 1 1/2 டம்ளர்

உப்பு                                                         : 1 சிட்டிகை (வெறும் மாவு பிசைய கூடாது)

yellow கலர் or மஞ்சள் பொடி        : 1/2 டி ஸ்பூன்.

நெய்                                                         : போளி வெந்து எடுப்பதற்கு தேவையான  அளவு

செய்முறை – (பூரணம் செய்ய)

 

  • கடலை பருப்பை வாசனை வரும் அளவு வறுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு மூடி வைக்கவும்.
  • பருப்பு மூழ்கும் அளவு வெந்நீர் விட்டால் போதும் (ஒரு மணி நேரம் ஊற விடவும்).
  • கிள்ளு பதத்திற்கு ஊறி இருக்கும்.
  • பிறகு நீரை வடித்து மிக்ஸி or கிரைண்டரில் கடலை பருப்பு 3/4 பாகம் மசிந்தவுடன் வெல்லம், தேங்காய் துருவல், ஏலப்பொடி சேர்த்து நைசாக அரைக்கவும்.
  • சிறிது தளர்த்தியாக இருக்கும், பயப்பட வேண்டாம்.
  • அதை எடுத்து ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு அரைத்த விழுதை சேர்த்து அடுப்பில் வைத்து கிளறினால் கெட்டியாகி விடும்.
  • பூரணம் ரெடி.

 

மேல் மாவு செய்முறை :

 

  • ஒரு தட்டில் மைதா மாவை போட்டு அதனுடன் சிட்டிகை உப்பு, கலர் பவுடர் or  மஞ்சள் பொடி சேர்த்து கலந்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, சிறிது எண்ணை விட்டு மாவை காற்று புகாமல் 1/2 மணி நேரம் மூடி வைக்கவும்.
  •  மேல் மாவு ரெடி.

 

போளி செய்முறை :

 

  • பூரணத்தை சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
  • மேல் மாவை சிறிது எடுத்து உள்ளங்கையில் பரத்திக் கொண்டு, பூரண உருண்டையை நடுவில் வைத்து மேல் மாவை நேன்றாக இழுத்து மூடவும்.
  • பிறகு அதை சப்பாத்தி போல் மைதா மாவை தொட்டுக்கொண்டு இட்டுக்கொள்ளவும்.
  • பிறகு தோசைக்கல்லில் போட்டு நெய் விட்டு இரு பக்கமும் திருப்பிப் போட்டு எடுத்தால் போளி ரெடி.
  • கருகவிடாமல் பார்த்துக்கொள்ளவும்.
Category: