Bama Samayal

பருப்பு உருண்டை குழம்பு / Paruppu Urundai Kuzhambu

Bama Narasimhan
Recipe by
Comments Off on பருப்பு உருண்டை குழம்பு / Paruppu Urundai Kuzhambu

பருப்பு உருண்டை குழம்பு

 

தேவையான பொருட்கள் :

 

3/4 மணி நேரம் ஊறவைத்து கரகரப்பாக, கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

 

துவரம் பருப்பு           : 1 டம்ளர்

க.பருப்பு                       : 1/4 டம்ளர்

மிளகாய் வற்றல்    : 6 Nos

உப்பு                              : தேவைக்கேற்ப

பெருங்காயம்           : சிறிதளவு

 

குழம்பு செய்ய :

 

புளி                                : 1 எலுமிச்சை அளவு

சாம்பார் பொடி         : 1 1/2 டி ஸ்பூன்

உப்பு                              : ருசிகேற்ப

கடுகு                            : 1 டி ஸ்பூன்

வெந்தயம்                 : 1 டி ஸ்பூன்

பெருங்காயம்          : சிறிதளவு

எண்ணை                   : தேவையான அளவு

கொத்தமல்லி          : சிறிதளவு

 

செய்முறை :

 

  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணை விட்டு கடுகு, வெந்தயம், பெருங்காயம் தாளிக்கவும்.
  • புளியை (3 டம்ளர் அளவிற்கு) கரைத்து விட்டு, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • 10 நிமிடம் கொதி வந்தவுடன் அரைத்து வைத்துள்ள பருப்பு கலவையை நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக பிடித்து கொதிக்கும் குழம்பில் ஒவ்வொன்றாக நிதானமாக போடவும்.
  • உருண்டை வெந்தவுடன் மேல மிதந்து வரும். அப்பொழுது அடுப்பை அனைத்து விடவும்.
  • பருப்பு உருண்டை குழம்பு ரெடி. பச்சை கொத்தமல்லி தூவி பரிமாறவும்.