Bama Samayal

Dum Aaloo

Bama Narasimhan
Recipe by
Comments Off on Dum Aaloo

Dum Aaloo

 

தேவையான பொருட்கள் :

 

சிறிய உருளைகிழங்கு     : 15 to 20 Nos. (வேக வைத்து தோல் உரிக்கவும்)

வெங்காயம்                           : 3 Nos. (அரைத்துக்கொள்ளவும்)

தக்காளி                                   : 4 Nos. (வெந்நீரில் போட்டு தோல் உரித்து அரைக்கவும்)

முந்திரி                                    : 10 Nos. (பேஸ்டாக அரைக்கவும்)

மிளகாய் பொடி                    : 2 டி ஸ்பூன்

தனியா பொடி                       : 2 டி ஸ்பூன்

சீரகம்                                        : 1 டி ஸ்பூன்

சோம்பு பொடி                       : 2 டி ஸ்பூன்

உப்பு                                          : ருசிகேற்ப

தயிர்                                         : 1 கப் (150 ml)

கஸ்தூரி மேத்தி                 : சிறிது

இஞ்சி பூண்டு பேஸ்ட்     : 1 டி ஸ்பூன்

கொத்தமல்லி தழை        : சிறிது

எண்ணை                              : 4 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் பொடி                     : 1/2 டி ஸ்பூன்

தாளிக்க :

ஏலக்காய்                              : 3 Nos.

கிராம்பு                                   : 3 Nos.

பட்டை                                    : 1 துண்டு

பிரிஞ்சி இலை                    : 1

 

செய்முறை :

 

  • ஒரு வாணலியில் எண்ணை விட்டு சீரகம் மற்றும் மசாலா பொருட்களை (தாளிக்க category) தாளிக்கவும்.
  • அரைத்த வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
  • பிறகு தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். மஞ்சள் பொடி போடவும்.
  • தயிரில் (dry powders) மிளகாய் பொடி, தனியா பொடி, சோம்பு பொடி சேர்த்து நன்றாக கலந்து கொதிக்கவிடவும்.
  • சேர்ந்தார் போல் வரும்பொழுது 1 டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.
  • கொதி வந்தவுடன் உருளை கிழங்கு சேர்க்கவும்.
  • தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  • முந்திரி விழுது சேர்த்து இறக்கி, கஸ்தூரி மேத்தி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

 

குறிப்பு : உருளை கிழங்கை உரித்தவுடன் ஒரு fork ஆல் குத்திக்கொள்ளவும். மசாலா உள்ளே இறங்கி நன்றாக இருக்கும்.

Category: